மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முஸ்லீம் மதகுரு அஸ்லம் பாபா கொரோனா தொற்றில் பாதித்தவர்கள், தன் கையை முத்த மிட்டால் நோய் தொற்றில், இருந்து விடுபடலாம் என்று கூறியிருந்தார். அவரின் வார்த்தையை நம்பி அப்பாவி மக்கள் அவரிடம் ஆசி பெற சென்றனர்.
கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக மதகுரு அகால மரணம் அடைந்ததோடு மட்டுமில்லாமல் பலருக்கும் நோய் தொற்றையும் பரப்பி விட்டு சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அதே போன்ற ஒரு சம்பவம் தற்பொழுது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னிடம் தாயத்து வாங்கி கட்டி கொண்டால் கொரோனா தொற்று போய்விடும் என்று முகமது இஸ்மாயில் மற்றும் அவரின் உதவியாளர் முகமது சலீம் ஆகியோர் மக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு கம்பி நீட்டியுள்ளனர்.
அவர்களின் சுயரூபத்தை புரிந்து கொண்ட மக்கள் தங்களின் பணத்தை தருமாறு வற்புறுத்தியுள்ளனர். பணம் கேட்டால் சூன்யம் வைத்து விடுவேன் என்று இஸ்மாயில் பயமுறுத்தியுள்ளார். மக்களின் புகாரை அடுத்து காவல்துறை அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.