முக கவசங்கள் வாங்கும், பொழுது கவனமாகவும், எச்சரிக்கையாகவும், மக்கள் இருக்க வேண்டும். இக்கட்டான இச்சூழ்நிலையில் போலி முக கவசங்கள் தயாரித்து லாபம் பார்க்கும் பேராசை மனிதர்கள்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும், காட்டு தீ போல் பரவி பல, அப்பாவி மக்களின் உயிர்களை குடித்துள்ளது. 7 லட்சத்தையும் கடந்து, இக்கொடிய தொற்றிற்கு மக்கள் தீவிர சிகிச்சை, பெற்று வருகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளுக்கு, தட்டுப்பாடு இல்லை என்பது, நிதர்சனமா உண்மை.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மக்களிடம் பணம் பறிக்கும், அற்ப குணம் கொண்ட மனிதர்கள் இருக்க, தான் செய்கின்றனர். பெங்களுரு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு வந்த, தகவலின் அடிப்படையில், குடோன் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, 12,000 போலி முக கவசங்களை கண்டு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவை அனைத்தும் சாதாரண, துணியால் தயாரிக்கப்பட்டது. மேலும் அவற்றில் போலி முத்திரைகள் இருப்பதை, காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே 70,000 ஆயிரம் போலி முக கவசங்களை, ரூ 1 கோடிக்கு விற்று ஏப்பம் விட்டுள்ளது அந்த கொள்ளை கூட்டம். ஏற்கனவே மக்கள் கடும், துயரத்தில் அவதியுறும் பொழுது, மக்களின் உயிரில் விளையாடும் இவர்களை, சும்மா விட கூடாது என்று, பலர் கருத்து கூறி வருகின்றனர்.