ஏழு மலையான் சொத்தை விற்க ஆந்திர அரசு முயற்சி – ஜனசேனா கட்சி கடும் கண்டனம்!

ஏழு மலையான் சொத்தை விற்க ஆந்திர அரசு முயற்சி – ஜனசேனா கட்சி கடும் கண்டனம்!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் ஆந்திர முதல்வர் தங்கள் மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளை பாதுக்காக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்திருந்தார்.. இது  நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் பல தரப்பு மக்களும் தங்களின் கடும் கண்டனங்களை ஜெகன் மோகன் ரெட்டி அரசிற்கு தெரிவித்து இருந்தனர்.

 ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்கு ஜன சேனா கட்சியின் மூத்த தலைவர் கிரண் ராயல் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

blank

விழுப்புரம், குடியாத்தம், திருவள்ளூர், மற்றும் தமிழகத்தில்  23 இடங்களில் தமிழக பக்கதர்கள் திருப்பதி மலையானுக்கு காணிக்கையாக நிலங்களை வழங்கியுள்ளனர்.  திருப்பதி தேவஸ்தானம் குழு ஒன்றினை அமைத்து இச்சொத்துக்களை விற்க முயல்வதாக ஜனசேனா குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it