Share it if you like it
- இந்தியாவில் உள்ள ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் குடிமகன்கள் காலை மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பாகவே மதுபாட்டில் நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் கால் வலிக்க நீண்ட வரிசையில் நின்று அதை வாங்கி செல்கின்றனர்.
- கொரோனா நெருக்கடியால் ஊரடங்கு நிலையில் மக்கள் சிறிது காலம் மதுபானம் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது அரசுக்கு பொருளாதாரத்தை சமன்படுத்த மதுக்கடை திறக்க வலியுறுத்தியுள்ளது.
- மதுக்கடைக்கு செல்பவர்களின் கைகளில் அரசு அதிகாரிகள் ஒரு சீல் வைக்க வேண்டும். அவ்வாறு சீல் வைத்திருப்பவர்களுக்கு அரசு எந்த நிவாரண பொருட்களும், ரேஷன் பொருட்களும் வழங்கக்கூடாது. மேலும் அந்த நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று வந்தாலும் மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது. ஏனெனில் கொரோனா நெருக்கடி காலத்திலும் மது குடிக்க பணம் இருக்கும்பொழுது அவர்களுக்கு குடும்பத்தை வழிநடத்தவும் போதுமான வசதி உள்ளதென்று அர்த்தம். அதனால் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஒரு நபர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=10222906426307973&id=1197173548
Share it if you like it