இந்தியாவில் அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பது அனைவரும் அறிந்த்தே.. சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில மத வியாபாரிகள் அப்பாவி மக்களை வன்முறைக்கு தூண்டி விட்டனர்… இதனால் பொது சொத்துக்களுக்கும், மக்களின் உடைமைக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது..
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல்.. போராட்டகார்களின் புகைப்படத்தை அம்மாநிலத்தின் முக்கிய வீதிகளில் காட்சிப்படுத்தி உரிய நஷ்ட ஈட்டு தொகையை செலுத்தாவிட்டால் அரசு களத்தில் இறங்கும் என்று பகீரங்கமாக கடும் எச்சரிக்கை விடுத்தார் யோகி…
இதனை அடுத்து தாமாக முன் வந்து அரசு கூறிய இழப்பீட்டு தொகையை போராட்டகாரர்கள் செலுத்தினர்.. இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்த நிலையில்.. மீண்டும் அதிரடியான சட்டத்தை அமல்படுத்த யோகி அரசு முடிவு செய்துள்ளது..
- கட்டாய மதமாற்றம் செய்தால் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை..
- 50 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்..
- காதலித்து திருமணம் முடிப்பதற்காக மதமாற்றம் செய்வது, கட்டாயப்படுத்துவது, என்பது லவ் ஜிகாத் என்று கூறப்படுகிறது..
- மதமாற்றம் செய்வதை பெருமளவு குறைக்க உ.பி. அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
- நாடக காதல் குரூப், மதத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்களுக்கு கடும் அதிர்வலைகளை இச்சட்டம் ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை..