மனநலம் பாதித்த பெண்ணின் குழந்தைகளை கொன்று சொத்துக்களை அபேஸ் செய்த – பலே பாதிரியார்!

மனநலம் பாதித்த பெண்ணின் குழந்தைகளை கொன்று சொத்துக்களை அபேஸ் செய்த – பலே பாதிரியார்!

Share it if you like it

பாதிரியாரின் பேராசை ஒரு குடும்பத்தையே சிதைத்து விட்டது. இப்படி பகலிலே பாவம் செய்யும் பாதிரியார்களுக்கு சட்டம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ரெட்டிபாளையத்து மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்தியாவில் கேரளாவை அடுத்து, தமிழகத்தில் தான் மத மாற்றும் கும்பலின் செயல்பாடுகள் தீவிரமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு மக்களிடையே இருந்து வருகிறது. எங்கெல்லாம் ஹிந்துக்கள் சிறுபான்மையினர் ஆகின்றனரோ அங்கெல்லாம் அவர்களின் உரிமைகள், பண்பாடு, கலாச்சரம், பண்டிக்கை, விழாக்கள் என அனைத்தும் பாதிக்கப்படுவதை மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை ஊடகம், பத்திரிக்கை செய்திகளில் நாம் காண முடிகிறது.

தமிழகத்தில் ஏதேனும் ஒரு ஹிந்துவுக்கு ’தலை’ போனால் அனைத்து கட்சிகளும் கண்ணை மூடிக்கொள்ளும் ஆனால் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த ஏதேனும் ஒருவருக்கு ஒரு கீறல் விழுந்தால் ஜய்யோ, அம்மா என்று அலறி கொண்டு ஓடிவருவதாக பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

அண்மையில் கரூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை, சேர்ந்த மனநலம் பாதித்த நாச்சம்மாள் என்னும் பெண்மணி, தனது மகன் மற்றும் மகளுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் அவர்களின் வீட்டின் அருகிலுள்ள தேவாலயத்தை  சேர்ந்த பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு இவர்களின் ஏழ்மையையும், குடும்ப சூழ்நிலையையும், கண்டு உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்று ஆறுதல் வார்த்தை கூறி, அந்த குடும்பத்துடன் நெருங்க ஆரம்பித்தார்.

தேவாலய வாசல் முன்பு காவலர்கள்

நாட்கள் செல்ல செல்ல மோசஸ், மனதில் தீய ஆவி புகுந்து கொண்டது. அதன் விளைவாக நாச்சம்மாளின் மகன் மற்றும் மகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தனது குழந்தைகள் கொடுரமாக கொலை செய்யப்பட்டது, கூட உணராமல் இருந்துள்ளார் நாச்சம்மாள். அந்த ஏழை தாய் வெளியில் நடமாடுவதை கூட தடுத்து விட்டது மோசஸ் கும்பல்.

உயிரிழப்பு குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், ரகசியமாக உடல்களை புதைத்து, விட்டதாக நாச்சம்மாளின் உறவினர்கள் மோசஸ் மீது, காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மேலும் நாச்சம்மாளின் இல்லத்தில், இருந்த பணம் மற்றும் நகைகள் மாயமாகி உள்ளது. இதனை அடுத்து  புகாரின் அடிப்படையில், பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு உள்ளிட்ட 3 நபர்களிடம், காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

 


Share it if you like it