Share it if you like it
- நேற்று பாகிஸ்தானில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. வுஹான் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மருத்துவமனைகளில் இல்லாததை எதிர்த்து பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
https://twitter.com/zarak_khaan/status/1247100489361211396?s=20
- சீன வைரஸ் நோயால் பாகிஸ்தானில் 13 மருத்துவர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள் கடும் பற்றாக்குறையின் காரணமாக இந்த போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் கொரோனா வைரசால் இறந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் வுஹான் கொரோனா வைரஸ் 3,277 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
Share it if you like it