கேரளா கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதாக பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
சமீபத்தில் கேரள மாநிலம் பாலக்காடு அருகே அயினிக்கட்டு மஹாவிஷ்ணு கோவிலில் பக்தர்கள் வணங்கும் தெய்வமான விஷ்ணு சிலையை மர்ம நபர்கள் உடைத்து ஒரு மூலையில் வீசியுள்ளனர். வழக்கம் போல் கம்யூனிஸ்ட் அரசு மெத்தன போக்கையே மேற்கொண்டது.
அண்மையில் கேரள அரசு கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த குருவாயூர் கோயிலின் நிலையான வைப்புகளில் இருந்து ரூ.5 கோடியை தேவஸ்வம் போர்ட் முதல்வரின் நிவாரண நிதிக்கு மாற்றுவதாக வெளியான செய்திக்கு கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கேரள அரசு ஏன்? மற்ற மத நிறுவனங்களிடமிருந்து பணம் எடுக்கவில்லை. கோயிலின் நிதியை விளக்குகளை கூட ஏற்ற முடியாத மற்ற இந்து கோவில்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று கேரள அரசிற்கு தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.