மிகப்பழமையான மொழி தமிழ் – பிரதமர் மோடி

மிகப்பழமையான மொழி தமிழ் – பிரதமர் மோடி

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி இந்தியாவின் செழுமிய கலாசாரத்தில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளதாகவும். ‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’ என்ற கோஷத்தின்கீழ், மாநிலங்கள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து மோடி பேசும் சிறு வீடியோ காட்சி, அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது .அதில் இந்திய மொழிகளில் தமிழ் மொழி பழமையானது, தமிழ் ஒரு சிறந்த மொழி, இந்தியாவின் பழமையான கலாசாரத்தில் தமிழின் பங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார் மோடி. ஆனால், எனக்கு தமிழ் மொழி அறிமுகமே இல்லை என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி நாட்டிலுள்ள ஒரு பழமையான மொழியை இன்னொரு மாநிலத்தவர்கள் அறியாமல் இருக்க கூடாது என்பதால்தான், மாநிலங்கள் நடுவே கலாசார பரிமாற்றம் அவசியம் என்கிறார் மோடி. பிற மாநிலங்கள் தமிழகத்தோடு மற்றொரு மாநிலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யட்டும், தமிழ் வாக்கியங்களை அந்த மாநிலங்கள் கற்கட்டும், தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளட்டும். 

இப்படி தமிழ் மொழியை பிற மாநிலங்கள் புரிந்துகொள்ள வசதியாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள மாநிலம், தனது மாநிலத்தில் தமிழ் திரைப்பட விழாக்களை நடத்தலாம், தமிழக இளைஞர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகளை நடத்தலாம் என்றும் மோடி ஆலோசனை தெரிவித்திருந்தார் இன்று ஹிந்தி திணிப்பு என்ற வதந்தி திட்டமிட்டு தமிழக அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு வரும் நிலையில் மோடியின் இந்த கருது நினைவுகூறத்தக்கது .


Share it if you like it