முதலமைச்சர் முதல் அரசாங்க ஊழியனின் பிள்ளைகள் வரை அரசுப்பள்ளியில் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று சட்டத்தை போடுங்க – தங்கர் பச்சான்..!

முதலமைச்சர் முதல் அரசாங்க ஊழியனின் பிள்ளைகள் வரை அரசுப்பள்ளியில் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று சட்டத்தை போடுங்க – தங்கர் பச்சான்..!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தமிழக அரசிற்கு தனது வேண்டுகோளை அண்மையில் டுவிட்டரில் இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

தமிழில் அர்ச்சனைக்கு ஆலோசனை வரவேற்கத்தக்க ஆலோசனை!
இது தமிழ்ப்பற்றின் வெளிப்பாடு!
அதே நேரம் நம் அரசு இன்னொரு
ஆலோசனை நடத்த வேண்டும்!
பெரும்பாலான தனியார் பள்ளிகளில்
விருப்பப் பாடமாகத்தான் தமிழ்பாடம்
இருக்கிறது.
விருப்பப் பாடமாக இருப்பதற்கு தமிழ் விருந்தாளி மொழியல்ல, அது நம் தாய்மொழி!
அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.
இங்கே தமிழை அடமானம் வைத்து, கல்வி வியாபாரம் செய்யப்படுகிறது,
ஐந்தாவது, ஆறாவது படிக்கும் மாணவர்களுக்கு கூட தமிழ் தெரியாத
சூழ்நிலைதான் தற்பொழுது இருக்கிறது!
சாமிக்கு தமிழில் அர்ச்சனை அபிஷேக பாலாகும்.
பள்ளியில் தமிழ்ப்பாடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஆகும்!
தமிழக அரசு இதையும் ஆலோசனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது எம் தாழ்மையான விண்ணப்பம்!

தி.மு.க தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் போன்று பலர் நடத்தி வரும் தனியார் பள்ளிகள் குறித்து  இயக்குனர் பேரரசு மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்று பலர் அப்பொழுது கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் மற்றொரு பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களும் தனியார் பள்ளிகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.

முதலமைச்சர் முதல் அரசாங்க ஊதியம் பெரும் கடைநிலை ஊழியன் வரை அனைவரின் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்கிற சட்டம் உடனடியாக பிறப்பிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகள் தரம் உயர வேண்டும் என தமிழ்நாடு அரசு எண்ணினால் இதனை செயல்படுத்தலாம்!

blank

blank

blank

https://youturn.in/factcheck/sunshine-schools-hindi.html


Share it if you like it