மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையை. மாற்று சிந்தனை கொண்ட கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், உயர் பதவியில் உள்ளவர்கள், கூட இதனை வரவேற்று அறிக்கை அளித்துள்ளனர். அண்ணா பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி அவர்கள் கூட புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. மார்க்கண்டே கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழர்கள் ஏன் மொழி மீது அதிகம் நெருக்கம் காட்டுகிறார்கள். அவர்கள் மீது இந்தி திணிக்கவில்லை. நீங்கள் அதைக் கற்றுக்கொள்ள விரும்பினால் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பவில்லை என்றால், அது தேவையில்லை.
இந்தி மொழியைக் கற்க நான் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன். இது இந்தியாவின் இணைப்பு மொழியாகும், இது சுமார் 50% இந்தியர்களால் பேசப்படுகிறது. (1 வது பாட மொழியாகவோ அல்லது 2 வது மொழியாக) ஆனால் அது உங்கள் விருப்பம், இது எனது சொந்த கருத்து மட்டுமே, இது உங்களுக்குத் தேவை என்றால் உடன்பட தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Its true but political move ji
இந்தியாவின் தலைநகரத்தை சென்னைக்கு மாற்றிவிடுங்கள் என்றால ஏற்றுக்கொள்வார்களா.