முன்னாள் எதிர்கட்சி தலைவருக்கு சுப்பிரமணிய சாமி கடும் எச்சரிக்கை..!

முன்னாள் எதிர்கட்சி தலைவருக்கு சுப்பிரமணிய சாமி கடும் எச்சரிக்கை..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் தி.க, கிறிஸ்தவ மிஷநரிகள், துணையுடன் ஹிந்து உணர்வுகள், கலாச்சாரம், அவர்களின் பண்பாடு, போன்றவற்றை சிதைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதாக பொது மக்கள் உட்பட பலர்  கடும் தங்களின் குற்றச்சாட்டுகளை விடியல் அரசு மீது இன்று வரை சுமத்தி வருகின்றனர்.

இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஹிந்து விரோத போக்கை மேற்கொள்ளும் நபர்களுக்கு தொடர்ந்து பல முக்கிய பதவிகளை வழங்கி வருகிறார்.

  • தமிழக பெண்களின் இடுப்பு குறித்து ஆய்வு செய்த திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக நியமனம் செய்தது.
  • மாவோயிஸ்ட் அனுதாபியாக இருக்கிறார் என்று ராஜ் மரியா சூசை என்பவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் தமிழக அரசு அவரை Tamil Nadu Public Service Commission பதவியில் அமர்த்தியது.
  • ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசுபவரும், கள்ளக் காதலுக்கு புது விளக்கம் கொடுத்தவரும் வீரமணியின் மிக நெருங்கிய கூட்டாளியுமான சுப.வீ-க்கு தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக தமிழக அரசு அண்மையில் நியமனம் செய்து இருந்தது.

இந்நிலையில் சட்டத்தின் வழிகாட்டுதல்களை துளியும் மதிக்காமல் அவசர அவசரமாக தமிழக அரசு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி முன்னாள் எதிர்க்கட்சி தலைவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Srinivasan678/status/1427330331590287360


Share it if you like it