தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் உள்ளது. இது பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற புகார் அந்நாட்களில் கடும் அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து பா.ஜ.க-வை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்து இருந்தார்.
பட்டியல் இன மக்களின் போராளியாக தன்னை காட்டி கொள்பவரும் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க தலைவர், முரசொலி அலுவலகம் குறித்தோ, ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலம் குறித்தோ, இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவதை தமிழக மக்கள் கவனித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மீது பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக தற்பொழுது புகார் ஒன்று எழுந்து உள்ளது. இது குறித்தாவது திருமா வாய் திறப்பாரா? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த ரணகளத்திலும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை மறக்கலை பாருங்க…😂😂😂 pic.twitter.com/5vcE5dPGtM
— பித்தன் (@agricultural78) September 7, 2021