முஷரப்புக்கு தூக்கு தண்டனை

முஷரப்புக்கு தூக்கு தண்டனை

Share it if you like it

பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரப்புக்கு தூக்கு தண்டனை அளித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் இராணுவ தளபதியான பர்வேஸ் முஷரப் 1999 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்தார். அப்போது பாகிஸ்தானை தனது இரும்புகரங்களுக்குள் கொண்டுவருவதற்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.

அதில் முக்கியமானதாக 2007 ஆம் ஆண்டு அரசியல்சட்ட நெருக்கடியை அமல்படுத்தினார். இதனால் பல நீதிபதிகள் வீடுகளில் சிறைவைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான நீதிபதிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் முஷரப்புக்கு எதிராக நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தபோது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு நெருக்கடிநிலையை அமல்படுத்தியதற்காக தற்போது முஷரப்புக்கு தூக்கு தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share it if you like it