மூத்த குடிமக்களுக்கு  ஓய்வுதியத்தை அதிகரிக்க – மத்திய அரசு முடிவு

மூத்த குடிமக்களுக்கு ஓய்வுதியத்தை அதிகரிக்க – மத்திய அரசு முடிவு

Share it if you like it

 

மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்  கூடுதலாக  உதவி தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளன.  இனி 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு இனி மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் .

மேலும்  மாற்று திறனாளிகள், விதவைகள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உதவி தொகைகள் உயர்த்தப்பட உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 3 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள்.

இதற்காக  2019-2020-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு ரூ.9,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. உதவி தொகை உயர்த்தும் பட்சத்தில் இந்த நிதி ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கும் என்று அங்குள்ள செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it