அயோத்தியா வழக்கில் மறுசீராய்வு செய்யப்போவது இல்லை

அயோத்தியா வழக்கில் மறுசீராய்வு செய்யப்போவது இல்லை

Share it if you like it

அயோத்தியா வழக்கில் மறுசீராய்வு செய்யப்போவது இல்லை என சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்திய வழக்கில் ஹிந்து மற்றும் முஸ்லிம்கள் உரிமைக்கோரிய பகுதியில் ஹிந்துக்கள் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்ற வரலாற்று தீர்ப்பு வழங்கியது வரலாற்று மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள அயோத்தியாவிலேயே ஐந்து ஏக்கர் நிலம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது இதை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றனர்.

இந்நிலையில் அரசின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு செய்யப்போவது இல்லை என  சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரபிரதேச சன்னி வக்பு வாரிய தலைவர் ஸுபார் பரூக் செய்தியாளர்களிடம் கூறியதாவது முக்கியமான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அரசு வழங்கும் மாற்று நிலத்தை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என கூறினார்.


Share it if you like it