மோடியினால் இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் !

மோடியினால் இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் !

Share it if you like it

பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370 ஐ நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் தடுமாறி நிற்கிறது. இதனால் இம்ரான்கான் பல நாட்டு பிரதமர்களுடன் ஜம்மு காஸ்மீரை பற்றி இந்தியாவிடம் பேச முறையிட்டார். அதனால் மலேசியா பிரதமர் ஜம்மு காஷ்மீரை குறித்து கருத்து தெரிவித்தார். ஆனால் இந்தியா, தனது உள்நாட்டு விவகாரங்களில் எந்த நாடும் தலையிட கூடாது என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தது. அதிலிருந்து எந்த நாடும் ஜம்மு காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச முன்வரவில்லை. எனவே இம்ரான்கான் முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில் பெல்ஜிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இம்ரான்கான் மோடி பிரதமராக இருக்கும்வரை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளிப்படையாக கூறினார். இதிலிருந்து பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it