பாகிஸ்தான் அரசின் கைப்பாவையாக செயல்பட்டு இரண்டு தலைமுறைக்கு மேல் ஜம்மூ காஷ்மீர் மக்களின் நிம்மதியை அழித்தவர்கள் பலர். அதில் முக்கியமான நபர்களில் 90 (வயது) சையத் அலி ஷா கிலானியும் ஒருவர். காஷ்மீர் பிரிவினைவாதிகளின் முக்கிய கருவியாக விளங்கிய ஹுரியத் மாநாட்டில் இருந்து கிலானி விலகியுள்ளார்.
காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்று 70 ஆண்டு கால வரலாற்று பிழையை, மத்திய அரசு அண்மையில் 370 வது பிரிவை நீக்கியதன் மூலம் அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை வழங்கியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
பிரிவினைவாதிகளை தூண்டி காஷ்மீரை தனி நாடாக மாற்றி விடலாம் என்று பாகிஸ்தான் ஏராளமான சலுகைகளை காஷ்மீர் பழமைவாதிகளுக்கு வழங்கியது. ஆனால் மோடி அரசு அவர்களின் கனவில் மண் அள்ளி போட்டது. ஜீலானி போன்ற பிரிவினைவாதிகளால் இனிமேல் நமக்கு எந்தவித பயனும் இல்லை என்று பாக் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ அவர்களை கை கழுவி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.