மோடி Vs அண்ணாமலை ஜாதகம்: பிரபல ஜோதிடர்கள் ஆருடம்!

மோடி Vs அண்ணாமலை ஜாதகம்: பிரபல ஜோதிடர்கள் ஆருடம்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஜாதகத்தை ஆய்வு செய்த பிரபல ஜோதிடர்கள் தங்களது எண்ணங்களை தெரிவித்து இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கர்நாடக மக்களால் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர், அம்மாநில காவல்துறையில் பணியாற்றிய போது ஏராளமான சாதனைகளை படைத்து இருக்கிறார். இவர், தீவிர இறைபக்தி மிக்கவர். அந்த வகையில், ஆன்மீக தேடல் வேண்டி இவர் இமயமலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு, பல்வேறு ஞானிகளையும் மகான்களையும் சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார். இதையடுத்து, தனக்குள் எழுந்த பல்வேறு மாற்றங்களை உணர்ந்துள்ளார். நீண்ட யோசனைக்கு பிறகு தனது காவல்துறை பணியை உதறி தள்ளி இருக்கிறார்.

இதையடுத்து, தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய அண்ணாமலை நாங்கள் தலைவர்கள் எனும் அறக்கட்டளையை தொடங்கினார். தம்மால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு தொடர்ந்து செய்து வந்தார். அதனை தொடர்ந்து, தனது கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்ய துவங்கினார்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் எல்.முருகன் தலைமையில் டெல்லி சென்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து, பா.ஜ.க. துணை தலைவர் மற்றும் மாநில தலைவர் என அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். அதன் பிறகு, தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பா.ஜ.க.வை கொண்டு சேர்க்கும் வண்ணம் மிக கடுமையாக உழைத்தார். அதன் பயனாக, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தற்போது பா.ஜ.க. மாறி இருக்கிறது.

இவரது அறிவாற்றல், பேச்சாற்றால் தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும், ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு இனிமா கொடுக்கும் வகையில், இவரது அறிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும் இருந்து வருகின்றன. மேலும், தி.மு.க.வின் குடும்ப அரசியலை ஒழித்து கட்ட அண்ணாமலையால் மட்டுமே முடியும். இவரே, தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழகம் நன்கு அறிந்த பிரபல ஜோதிடர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஜாதகத்தை ஆய்வு செய்து இருக்கின்றனர். அதில், பாரதப் பிரதமர் மோடிக்கு இருப்பது போன்ற ராஜயோகம், அண்ணாமலைக்கும் உள்ளது என்று தெரிவித்து இருக்கின்றனர். இவர், சட்டமன்றம் மட்டும் அல்ல நாடாளுமன்றத்திற்கும் செல்ல கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணித்துள்ளனர். இந்த காணொளிதான், தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it