யோகா சார்ந்த காணொலிகளை விரைவில் வெளியிடுவேன்- பிரதமர் மோடி!

யோகா சார்ந்த காணொலிகளை விரைவில் வெளியிடுவேன்- பிரதமர் மோடி!

Share it if you like it

கொரோன எதிரொலி காரணமாக, நாட்டு மக்கள் ஊரடங்கு உத்தரவினை, பின்பற்றி வருகின்றனர். மக்கள் பயன் உள்ள வகையில், உடற்பயிற்சி, யோகா, செய்து தங்களது ஆரோக்கியத்தை, பேண வேண்டும் என

அரசியல் பிரபலங்கள், தலைவர்கள், காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு முதற்கொண்டு  மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் பாரதப் பிரதமர் மோடி  அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை யோகா நித்ரா பயிற்சி செய்கிறேன்.

யோகா மதம் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்பதே நிதர்சனமான உண்மை.

இது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேலும் மேம்படுத்துகிறது, மனதை நிதானப்படுத்துகிறது, மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. யோகா நித்ராவின் பல வீடியோக்களை இணையத்தில் காணலாம். நான் ஒவ்வொரு வீடியோவையும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பகிர்கிறேன்.

என்று கூறியுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா இது அற்புதம் நன்றி என்று கூறியுள்ளார். பிரதமரின் உடற்பயிற்சி காணொலி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


Share it if you like it