சீன அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சமூக வலைத்தளம் Weibo. விளாடிவோஸ்டாக் துறைமுகம் தற்பொழுது ரஷ்ய நாட்டில் உள்ளது. வரலாற்று ரீதியில் அது சீனாவிற்கு சொந்தமான பகுதி என்று அச்சமூக வலைத்தளத்தில் கூறப்பட்டு இருந்தது. இதனை சீனாவின் வெளிநாட்டு அரசியல், பொருளாதார ஆய்வாளர், மற்றும் பத்திரிக்கையாளர், ஷேன் ஷிவே வரவேற்று இருப்பது ரஷ்யர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, தைவான், வியட்நாம், ஜப்பான், பிலிப்பைன்ஸ், போன்ற நாடுகளுக்கு பிறகு இப்போது சீனா ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமான பகுதி என்று கூறியுள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தையும் சீனா வெகு விரைவில் எங்கள் பகுதி என்று உரிமை கோரும் என எதிர்பார்க்கலாம் என்று Frontal Assault கிண்டல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1278603564521308160