ராணுவ மேஜருக்கு பாக்., தீவிரவாதிகள் மிரட்டல்,  பாக்., ராணுவத்தையும் சேர்த்து கூட்டிட்டு வா- மேஜர் கெளரவ் ஆர்யா பதிலடி!

ராணுவ மேஜருக்கு பாக்., தீவிரவாதிகள் மிரட்டல், பாக்., ராணுவத்தையும் சேர்த்து கூட்டிட்டு வா- மேஜர் கெளரவ் ஆர்யா பதிலடி!

Share it if you like it

பாகிஸ்தான்  பிடியில் சிக்கி பலூசிஸ்தான் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பல அப்பாவி மக்களின் உயிர்களை பயங்கரவாதிகள் தினம் பறித்து வருகின்றனர். தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் அங்கு நிகழ்வதை இந்திய ராணுவ உயர் அதிகாரி மேஜர் கெளரவ் ஆர்யா (ஓய்வு) தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கடும் கண்டனங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் மேஜர் உருவ படத்தை தூக்கில் இட்டு இது தான் உனக்கு கதி என்று காணொலி ஒன்றினை வெளியிட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

அண்மையில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுவில் உள்ள தீவிரவாதி ஒருவன் கெளரவ் உன் தலையை தூண்டித்து கொடூரமாக கொலை செய்வோம் என்று  கணொலி ஒன்று வெளியிட்டுள்ளான்.

இதற்கு கெளர தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது என்னைக் கொலை செய்வதாக அச்சுறுத்துகின்றனர். நான் சுதந்திர பலூசிஸ்தானுக்காக பேசுவதால் அவர்கள் என் தலையை துண்டிக்க விரும்புகிறார்கள். பயங்கரவாதிகள் அல்லது உங்கள் இராணுவத்திற்கு நான் பயப்படவில்லை கூட்டிவா!

அன்புடன்
மேஜர் கெளரவ் ஆர்யா (ஓய்வு)
17 குமாவோன் ரெஜிமென்ட்
இந்திய ராணுவம்

என்று தனது முழு விவரத்தையும் வழங்கியுள்ள அவர் மன தைரியத்தையும், துணிச்சலையும் காட்டுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it