ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு…! மத்திய அரசு முகம்மது ஷெரீப்பிற்கு அழைப்பு..!

ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு…! மத்திய அரசு முகம்மது ஷெரீப்பிற்கு அழைப்பு..!

Share it if you like it

கோடிக்கணக்கான ஹிந்துக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வமான ராம பிரானின் ஆலயம். பல கசப்பான அனுபவங்களுக்கு இடையில் நாளை பூமி பூஜை நடை பெற விருக்கிறது. இவ்விழாவில் பிரதமர் உட்பட மொத்தம் 175 நபர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதில் 135 சாதுக்கள் மற்றும் 4 இஸ்லாமியர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது கூடுதல் தகவல் ஆகும். ராமர் கோவில் மீண்டும் நிர்மாணிப்பதில் மூன்று இஸ்லாமியர்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். இதில் துளியும் தொடர்பில்லாத ஷெரீப் சாச்சாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஷெரீப் சாச்சா பற்றிய சிறுகுறிப்பு..

முகம்மது ஷெரீப்பிற்கு அண்மையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவித்ததன் மூலம் அவரின் சமூக சேவைக்கு கிடைத்த கெளரவமாக இன்று வரை இந்திய மக்களால் பார்க்கப்படுகிறது.

ஹிந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்துவர் என ஜாதி, மதம், பேதமின்றி கடந்த 27 வருடங்களாக அடையாளம் தெரியாத மற்றும் ஆதரவில்லாமல் இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை தனது சொந்த செலவில் செய்துள்ளார் (80) ஷெரீப் சாச்சா.  அயோத்திவாசியான இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சுமார் 25,000 மேற்பட்ட ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

இவரின் புனிதமான சேவையை போற்றும் விதமாக மத்திய அரசு பூமி பூஜையில் கலந்து கொள்ளுமாறு இவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. உடல் நிலை காரணங்களால் அடிக்கல் நாட்டு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாது என்று ஷெரீப் சாச்சா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்துவாவது, முஸ்லீமாவது, அனைத்தையும் தாண்டி மனிதநேயமே முக்கியம் என்று ஷெரீப் சாச்சா அடிக்கடி கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it