ரோஹித் சர்மா சாதனை

ரோஹித் சர்மா சாதனை

Share it if you like it

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லாவை முந்தி நான்காம் இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்கள் முறையே சச்சின் டெண்டுல்கர், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ரிக்கி பாண்டிங் உள்ளனர். ரோஹித் சர்மாவுக்கு இது 28 சதமாகும். ரோஹித் 159 ரன்களில் வெளியேறினார். 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராகுல் 102 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கோலி ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்னரே அவுட்டாகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 46 ஓவர் முடிவில் 3விக்கெட் இழப்புக்கு 314 ரன்களுடன் ஆடி வருகின்றது.


Share it if you like it