மதுரை தனக்கன்குளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள கிறிஸ்டியன் பிரதர்ஸ் அசெம்பிளி சர்ச் என்கிற தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் விஜயன் சாமுவேல். கடந்த 5 வருடமாக அந்த தேவாலாயத்தில் நல்லொழுக்கம் பற்றி மக்களுக்கு வகுப்பு எடுப்பதும், பாவ மன்னிப்பு வழங்குவது, பிரார்த்தனைகள் செய்து வந்துள்ளார்.
பாதிரியார் தனது இரு சக்கர வாகனம் பழுது அடைந்து விட்டது என்று அருகில் உள்ள மெக்கானிக்கிடம் வண்டியை விட்டுள்ளார். வண்டியை பார்த்த மெக்கானிக் சுரேஷிற்கு பேர் அதிர்ச்சி. இது அவருடைய கஷ்டமரின் வண்டி என்பதை புரிந்து கொண்டு.
வண்டியின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உரிமையாளர் கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துறை விஜயனை மடக்கி பிடித்தனர். அதன் பின் காவல்துறை கொடுத்த முட்டி வைத்தியத்தில் அனைத்து உண்மைகளை ஜெபித்துள்ளார் பாதிரியார்.
அதன் பின்பே அவர் பலே பைக் திருடன் என்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. மதுரை நகரில் மட்டும் 12க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடி அந்த பணத்தை வைத்து மக்களை கூட்டி வார இறு நாட்களில் நல்லொழுக்கம் ஜெப கூட்டம் நடத்தியுள்ளார். பல முக்கிய புள்ளிகளின் ஆதரவு இருப்பதால் தான் இத்தனை ஆண்டுகள் அவரின் விஷயம் வெளி உலகத்திற்கு தெரியவில்லை.
ஜெப கூட்டம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் தனது பழைய தொழிலுக்கே தீய ஆவி அவரை இழுத்து சென்றுள்ளது பாவம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.