விடுதலைபுலிகள் தடை நீட்டிப்பு

விடுதலைபுலிகள் தடை நீட்டிப்பு

Share it if you like it

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு பின்னர் விடுதலை புலிகளை இந்தியாவில் மத்திய அரசு தடைசெய்தது. இந்த தடையை மத்திய அரசு தொடர்ந்து நீடித்து வந்தது. கடைசியாக கடந்த மே மாதம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு தடையை நீடித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இதனால் மத்திய அரசானது டெல்லி உயர்நீதிமதின்றதில் நீதிபதி சங்கீதா பிந்த்ரா செகல் தலைமையில் தீர்ப்பாயத்தை ஏற்படுத்தியது. இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உட்பட பலர் நேரில் வாதாடினர். இந்நிலையில் தீர்ப்பாயமானது விடுதலைபுலிகள் மீதான தடையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


Share it if you like it