கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையும் சோக கடலில் ஆழ்த்தியுள்ளது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும், மக்களின் துன்பத்திற்கு எவ்வளவு ஆறுதல் வழங்கினாலும். அவர்களின் உணர்வுகளுக்கு, மருந்து அளிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. உலகம் முழுவதும் உள்ள, வழிப்பாட்டு தலங்கள் எல்லாம் மக்களின் நலன் கருதி, மூடப்பட்டு உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விடுதலை நாளிதழ். எல்லா மத வழிப்பாட்டு தலங்களும் முடியதை அடுத்து தங்கள் நாளிதழில் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
கரோனா… நாத்திகர், ஆத்திகர் பிரச்சனை அல்ல! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கரோனா… நாத்திகர், ஆத்திகர் பிரச்சனை அல்ல! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிhttps://t.co/ZoSg2FXzb3
— VIDUTHALAI – விடுதலை நாளிதழ் (@viduthalainews) March 20, 2020
பகுத்தறிவு பத்திரிக்கை என்று கூறிக்கொள்ளும் விடுதலை நாளிதழ் இப்பொழுது ஏசு, இல்லை, அல்லா இல்லை, ஏன் கடவுளே இல்லை என்று கருத்து தெரிவிக்கவில்லை என பலரும் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். விடுதலை நாளிதழ் முகநூல் பக்கத்தில் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல பாத்திங்தளா மக்களே கொரணோவில் கோவிலையே பூட்டிட்டாங்கன்னு பேசமுடியாது தேவாலயமும் மசூதியூம் மூடிட்டாங்க இந்த சமயத்துல பேசினா அவங்களையூம் சேத்து பேசவேண்டியதா போயிரும் இன்னைக்கு வேற வெள்ளிக்கெழமை பாயிங்கள பகைச்சிக்கூடாது. ஞாயிற்றுக்கெழமை பாதர்களையூம் பகைச்சிக்க முடியாது கோழி கறி முட்ட வெலலாம் கொறஞ்சிருக்கு அதனால போடுர ஓசி சோத்த சேத்த போடுவாங்க அதானே இந்த நாத்திகம் ஆத்திகம்னு கமல் மாதிரியான உளறல் பதிவு மானமிகு(?)ஆசிரியரே.