விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி

விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி

Share it if you like it

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ரிசாட்-2BR1 என்ற செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி விண்கலம் மூலம் விண்ணில் ஏவ உள்ளது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. விண்கலனானது இன்று மாலை 4.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளித்தளத்தில் இருந்து ஏவப்பட்ட உள்ளது. மேலும் இது ஐம்பதாவது பி.எஸ்.எல்.வி விண்கலனாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிசாட்-2BR1 செயற்கைக்கோளானது விவசாயம், தேசிய பேரிடர், காடு வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் பயன்படும் என இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனுடன் இத்தாலி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை சார்ந்த வணிகரீதியான செயற்கைகோள்களும் ஏவப்படவுள்ளன.


Share it if you like it