கொரோனா தனது கோர முகத்தை அமெரிக்கா, இத்தாலி, இன்னும் பிற நாடுகள் போன்று இந்தியாவில் தனது ஆட்டத்தை ஆட முடியாதற்கு இரவு, பகலாக, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் அரும் பணியே என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இலங்கை தமிழர்களின் நலன் கருதி, இந்திய அரசு அண்மையில் அந்நாட்டிற்கு மருந்து பொருட்களை, ஏற்றுமதி செய்தது. தொடர்ந்து மோடி மந்திரம் ஜெபிக்கும் உள்ளூர் சில்லறை போராளிகள், மத்திய அரசிற்கு இதுவரை நன்றி, கூட தெரிவிக்கவில்லை என தமிழக மக்கள், குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோதபய ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கொரோனா ஒழிப்பு பற்றிய சில குறிப்புகளை தமிழ் மொழியில் காணொலியாக வெளியிட்டுள்ளதற்கு இலங்கை தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா இன்னும் முழுமையாகக் குறைவடையவில்லை. ஆனாலும் இப்போது நாம் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் நாம் வேலைக்காக செல்லும்போதும், பணியிடங்களில் வேலையின் போதும் மற்றும் வீடு திரும்பும்போதும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான உதவிக்குறிப்புகள். pic.twitter.com/vrnSp9DDBT
— Gotabaya Rajapaksa (@GotabayaR) April 29, 2020