விவசாயிகளின் திட்டத்தில் கை வைத்த கட்சிகள்..!

விவசாயிகளின் திட்டத்தில் கை வைத்த கட்சிகள்..!

Share it if you like it

நமது நாடு விவசாய நாடு. மகாத்மா காந்தி கூறியது போல, “நமது நாடு கிராமத்தில் வாழ்கின்றது, விவசாயமே நமது பொருளாதாரத்தின் ஆன்மா”. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), விவசாயத்தின் பங்கு 26 சதவீதம். சுமார் 143 மில்லியன் ஹெக்டேரில்,  நமது நாட்டில், விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. உலகிலேயே அதிகமான நிலத்தில் விவசாயம் செய்யும் நாடாக, நமது நாடு திகழ்கின்றது. ஒவ்வொரு சிறு, குறு விவசாயிகளும், தங்களுடைய நிலத்தில், விவசாயத்தை செய்து, தங்களின் வாழ்க்கையை, வாழ்ந்து வருகின்றனர். நமது நாட்டின் பொருளாதாரத்தின், முதுகெலும்பாக, விவசாயம் உள்ளது. விவசாயத்தின் மூலம், நிறைய வேலை வாய்ப்புகளை, தற்போதைய மத்திய அரசு உருவாக்கி வருகின்றது.

PM Kisan Samman Yojana Latest News: अगस्त में आने वाली 2000 रुपए की छठी किस्त से पहले किसानों को आया Message, जानें क्या हैं इसमें खास - Pm kisan samman nidhi yojana

 

பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி யோஜ்னா (PM – KISAN) திட்டம், 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நேரடியாக பணமாக வழங்கியுள்ளது. இது, அவர்களின் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களது குடும்பங்களுக்கு உதவுகிறது.

பண உதவி நேரடியாக விவசாயிகளுக்குச் செல்லாமல் இருப்பதைத் தடுப்பதற்கும், விவசாயிகளுக்கு நிதி உதவி பலன் நேரடியாக கிடைப்பதற்கும், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் மாற்றப்படுவது என, பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் செயல் பாடுகள் அதி வேகத்தில் நடந்து உள்ளது.

கோவிட்-19 தொற்று நோய்களின் போது, விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதில், இந்தத் திட்டம் பேருதவியாக இருந்ததுடன், ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

தமிழகத்தில்  110 கோடி ரூபாய் அளவில் பணம் கையாடல்:

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ,நிதியுதவி வழங்குவதற்காக, பிரதம மந்திரி விவசாயிகள் உதவி செய்யும் திட்டம் (PM Kisan Scheme) கொண்டு வரப்பட்டது. இதில் விவசாயிகள் மட்டுமே பதிவு செய்து, மத்திய அரசின் நிதியுதவி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் விவசாயிகள் அல்லாத போலி நபர்களைச் சேர்த்து, பல கோடி ரூபாய் அளவில், மோசடி நடந்து உள்ளது. இது தொடர்பான தகவல் தெரிய வந்ததை அடுத்து, மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தமிழக போலீசார், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை கைது செய்து உள்ளனர்.

14 Cr Farmers Get Big Gift, Loan Will Get 1.60 Lakh Without Guarantee - 14 करोड़ किसानों को बड़ा तोहफा, बिना गारंटी के 1.60 लाख रुपए का मिलेगा लोन | Patrika News

இந்த முறைகேட்டில்  ரூபாய் 110 கோடி அளவில், பணம் கையாடல் நடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதுடன், பல அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அவர்கள், மற்ற மாநிலங்களில் இவ்வாறு முறைகேடு இல்லை, என கூறினார். மேலும், அவர் கூறுகையில், பிரதமரின் கிசான் திட்டத்தில், முறைகேடு நடந்துள்ளதாக தமிழக அரசிடம் இருந்து தகவல்கள் கிடைத்து உள்ளன என்றும், உரிய நிலம் வைத்திருக்கும் தகுதி வாய்ந்த விவசாயிகளை அடையாளம் காண்பது, ஒட்டு மொத்தமாக மாநில அரசின் பொறுப்பு என்றும், இந்த முறைகேடு தொடர்பாக மாநில அரசு விசாரணையில் இறங்கி உள்ளது என்றும் கூறினார்.

தமிழக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்:

விவசாயிகள்  திட்டம் முறைகேடு குறித்து, தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

PM-Kisan Scheme: मोदी सरकार का बड़ा फैसला, अप्रैल में इस समय किसानों को मिलेंगे 2000 रुपये | business - News in Hindi - हिंदी न्यूज़, समाचार, लेटेस्ट-ब्रेकिंग ...

விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய மாநில விவசாயத் துறை அமைச்சர் திரு துரைக்கண்ணு  அவர்கள்,  கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது என்றும்,  கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகள் பதிவு செய்வது மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றும்,  இதுவரை 30.36 லட்சம் பயனாளி களின் விவரங்கள் சரிபார்க்கப் பட்டுள்ளன என்றும், இதுவரை ரூ.52.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், கூறினார்.

முறைகேடு எவ்வாறு நடந்தது?

 2018ம் ஆண்டு பிரதமரின் கிசான் திட்டம் தொடங்கப் பட்டது. இதன் மூலம், 5 ஏக்கருக்கும் குறைவாக, நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு,                  ஆண்டுக்கு ரூபாய் 6000 என, நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப் படுகிறது. சிலருக்கு மட்டுமே, இந்த திட்டம், செயல் படுத்தப் படுவதாகவும், பல

விவசாயிகள், திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும், புகார்கள் எழுந்ததை அடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு         பதிலாக மாவட்ட,  வட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரிகள்,                     பயனாளிகளை தேர்வு செய்யலாம் என விதிமுறை திருத்தப்பட்டது. அதற்காக அந்தந்த பகுதி வேளாண்துறை அதிகாரிகளுக்கு, ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப்பட்டது.

வேளாண்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வலைதள ரகசிய குறியீட்டு        எண்களை மோசடி பேர்வழிகள் திருடி விவசாயிகள் அல்லாத நபர்களிடம்,          பணம் வாங்கிக் கொண்டு பயனாளிகளாக, இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.

மாவட்ட அதிகாரிகளின் லாகின் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை சில மோசடிக்காரர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளனர். விவசாயத் துறையால் நியமிக்கப்பட்ட (ஒப்பந்த) ஊழியர்கள் தான், இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்? உடனடியாக மாவட்ட அதிகாரிகளின் பாஸ்வேர்டை மாநில அரசு மாற்றி விட்டது. மண்டல மற்றும் மாவட்ட அளவிலான PM-KISAN கணக்குகளின் லாகின்-ஐடிக்களை டி-ஆக்டிவேட் செய்து உள்ளது.

கடந்த ஜுலை மாதம் 10ம் தேதி இத்திட்டத்தில் 6வது தவணை தொகையான     ரூபாய் 17,500 கோடியை மத்திய அரசு விடுவித்தது. அப்போது மோசடியாக சேர்க்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் இரண்டாவது தவணை தொகை 2000         ரூபாய் வரவு வைக்கப்பட்டது.  இந்த திட்டத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி

உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் பணம் வாங்கிகொண்டு, பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்உள்ளன. குறிப்பாக, கடலூர்     மாவட்டத்தில், இந்தத் திட்டத்தில், 1.79 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு, பயன்பெற்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களில், புதிதாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இவர்களுக்கும், சமீபத்தில் வங்கி கணக்கில் முதல் தவணையாக 2000 ரூபாய் பணமும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசின் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடாக பல்வேறு                  நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

கடலூர் அடுத்த, காரைக்காடு ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்த ,300-க்கும் மேற்பட்ட நிலம் இல்லாதவர்கள், விவசாயிகளாக, பெயர்கள் சேர்க்கப்பட்டு, தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக ,கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்ததையடுத்து, மாவட்டம் முழுவதிலும் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நடைபெற்றுவருகின்றன.

அதன்படி வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல் துறை              இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில்    சேர்க்கப்பட்ட, 80 ஆயிரத்து 752 பேரில், 40 ஆயிரம் பேர், கடலூர் மாவட்டத்தை     சார்ந்தவர்கள் என்றும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும், தெரியவந்தது. இதில், கடலூர்       மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம், பேரில் 4 ஆயிரம் பேர் மட்டுமே,             உண்மையான பயனாளிகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

எனவே, முறைகேடாக சேர்க்கப்பட்டவர்களை பட்டியலில் இருந்து நீக்கி,              அவர்களின் வங்கி கணக்குகளும், உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.  அடுத்த     கட்டமாக, போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கில், அரசு செலுத்திய                 பணத்தை வசூலிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி,                மாவட்டத்திலுள்ள 226 வங்கி கிளைகளில், தலா ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு, போலி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இருந்து, பணத்தை, மாவட்ட          ஆட்சியரின் பொதுக்கணக்குக்கு மாற்றும் பணி, நடைபெற்று வருகிறது.

அதேபோல், பிற மாவட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்தும்,        ரூபாய் 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆட்சியரின் பொது கணக்கில்         செலுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், 11,200 போலி பயனர்கள், சேர்க்கப் பட்டு உள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து, ரூ.4.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மோசடி கணக்குகள்?

5.95 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் ஆராயப் பட்டன. அதில் 5.38 லட்சம் பயனாளர்கள் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட  ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்தது:

வேலியே பயிரை மேய்வது போல, சரியாக செயல்பட வேண்டிய அதிகாரிகளே, தவறு செய்து, விவசாயிகளின் பணத்தை முறைகேடு செய்தது, மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.

மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது? என கேள்வி கேட்பவர்கள், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, என்ன கேள்வி கேட்டார்கள்? தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் சென்று சேர வேண்டிய பணத்தை, முறைகேடு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சேர விடாமல் தடுப்பது,  மிகவும் வேதனையான செயல்.

மத்திய அரசு செயல் படுத்தும், பல நல்ல திட்டங்களை, சாமானிய, ஏழை, எளிய மக்களுக்கு சென்று சேர விடாமல் தடுப்பவர்களை, நாம் எளிதில் அடையாளம் கண்டு, அவர்களை சமுதாயத்திலிருந்து புறம் தள்ள வேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

– அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies,

 


Share it if you like it