Share it if you like it
- கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரின் ஹண்ட்வாராவில் லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான ஒரு என்கவுன்டர் நடவடிக்கையில் கர்னல் அசுதோஷ் ஷர்மா வீரமரணமடைந்தார். அவருடன் மேலும் நான்கு பாதுகாப்பு வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
- ஹண்ட்வாராவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது இறந்த வீழ்ந்த ஜவான்களை ராஜஸ்தான் மாநிலம் கவுரவித்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் வீரமரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு மாலை அணிவித்து மற்றும் 61 குதிரைப்படை மூலம் ஜெய்ப்பூர் ராணுவ நிலையத்தில் ராணுவ வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
- வீரமரணமடைந்த கர்னல் அசுதோஷ் ஷர்மாவின் மனைவி வெள்ளிக்கிழமை காலை ஜெய்ப்பூரில் உள்ள தென்மேற்கு ராணுவ கட்டளையில் அவரது அஸ்தியை கரைத்தார். பல்லவி சர்மா, முன்னதாக, உயிரிழந்த கணவருக்காக கண்ணீர் சிந்த மாட்டேன் என்று கூறியிருந்தார். ஏனெனில் நான் ஒரு பெருமைமிக்க ராணுவ வீரரின் மனைவி மற்றும் நாட்டைப் பாதுகாக்கும் போது என் கணவர் உயிர்த்தியாகம் செய்தார். “நான் அவரது தியாக உணர்வைப் நினைத்து பெருமைப்படுவேனே அன்றி ஒருநாளும் கண்ணீர் விடமாட்டேன். நாட்டிற்காக தியாகம் செய்யப்படுவது ஒரு மரியாதை, ”என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it