அண்மையில் ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீர மரணம் அடைந்துள்ளார். அவரின் குடும்பத்திற்கு அரசு வேலையும் 20 லட்ச ரூபாயும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட கை கலப்பில் இந்திய தரப்பில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் ஒருவர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 20 லட்ச ரூபாயை பழனி குடும்பத்திற்கு அறிவித்தது மட்டுமில்லாமல் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
#LadakhBorder பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 16, 2020