ஏர்டெல் நிறுவனமானது வைபை மூலம் வாய்ஸ் ஓவர் கால் திட்டத்தை அறிமுகப்டுத்தியுள்ளது. இதன் மூலம் மொபைல் நெட்ஒர்க் இல்லாதபோதும் அருகில் உள்ள வைபை நெட்ஒர்க்கின் மூலம் அழைப்பு மேற்கொள்ளலாம். இதற்காக தனியே கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என ஏர்டெல் நிறுவனமானது அறிவித்துள்ளது.
இந்த சேவை முதலில் தலைநகர் டெல்லியிலும் பின்னர் அனைத்து நகரங்களிலும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவையை பெறுவதற்கான ஐந்து மொபைல் போன்கள் ஏர்டெல்லால் அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்சி S10, கேலக்சி S10e, கேலக்சி S10+, ஒன்பிளஸ் 6T, ஒன்பிளஸ் 6 மொபைல்கள் மூலம் தற்போது வாய்ஸ் ஓவர் அழைப்பை மேற்கொள்ளலாம்.
இதன் மூலம் வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள வைபை மூலம் வாய்ஸ் ஓவர் அழைப்பை மேற்கொள்ளலாம். வாய்ஸ் ஓவரை மேற்கொள்ள சமீபத்திய போனின் மென்பொருளை அப்டேட் செய்து இருக்கவேண்டும். 5 நிமிட காலிற்கு 5MB க்கும் குறைவான அளவே மொபைல் டேட்டா செலவாகும். வைபை நெட்ஒர்க் இணைப்பு துண்டிக்கப்பட்டால் volTe உடன் தானாகவே கால் இணைக்கப்படும்.