”ஹலால்” பொருளாதாரமும் அதன் அரசியலும்…!

”ஹலால்” பொருளாதாரமும் அதன் அரசியலும்…!

Share it if you like it

“ஹலால்” சான்றிதழ் குறித்து சமீப காலமாக மக்களிடையே பல்வேறு வகையான கருத்துக்கள் நிலவி வருகிறது. “ஹலால்” சான்றிதழ் என்றால் என்ன அது எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து சற்று பார்ப்போம்.

“ஹலால்”ஒன்றும் தூய்மைக்காக வழங்கப்படும் தரச் சான்றிதழ் அல்ல. அது ஒரு மதச்சான்றிதழ், அதைப் பெற ஓர் கடைக்காரர் கண்டிப்பாக ஒரு இஸ்லாமியரை பணியில் அமர்த்த வேண்டும் அல்லது இஸ்லாமியரிடம் இருந்து மட்டுமே இறைச்சி வாங்க வேண்டும். இஸ்லாமியரை வேலைக்கு வைக்கும் பட்சத்தில் அந்த இஸ்லாமியர் குரானிலிருந்து மத வரிகளை ஓதி கோழி அல்லது ஆட்டின் கழுத்து பகுதியை அறுப்பார். இஸ்லாமியர் அல்லாத நபர் இவ்விதம் விலங்குகளை மாமிசத்துக்காக கொல்ல முடியாது, ஏனெனில் அது “ஹலால்”முறை அல்ல. இதன் மூலம் இது மதரீதியாக இஸ்லாமியருக்கு மட்டுமே ஒரு குறைந்த பட்ச வருமானத்தை ஈட்டித் தரக்கூடியது என்பது தெளிவாகிறது.

அடுத்து, ஓர் உணவு அங்காடி “ஹலால்” சான்றிதழ் வாங்க முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை இஸ்லாமிய மேல் மட்டத்திற்குத் தர வேண்டும். அச்சான்றிதழ் பெற்ற பின்பு அந்த அங்காடியின் உரிமையாளர், இஸ்லாமியர் மட்டுமில்லாமல் மாற்று மத வாடிக்கையாளர்களிடம் இருந்தும் உணவின் விலையோடு சேர்த்து அதற்குரிய தொகையையும் வசூலித்துக்கொள்வார். அதாவது தங்களுக்குத் தெரியாமலேயே, மறைமுகமாகப் பிற மதத்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு வரி (“ஜசியா”?!) கட்டுகிறார்கள். எவ்வளவு கசப்பான உண்மை இது. பிற மதத்தவர் ஏன் இஸ்லாமியர்களுக்கு கப்பம் கட்ட  வேண்டும்? அதுவும் அவர்களுக்கு தெரியாமலேயே ஏன் செலுத்த வேண்டும்? இது குறித்து யாரும் இங்கு கவலைப்படுவதில்லை, கேள்வியும் கேட்பதில்லை. தன் நாட்டிற்கு வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இதை உறுதியுடன் எதிர்க்க வேண்டும்.

பிற மதத்தவர் “ஹலால்” சான்றிதழ் இல்லையென்றாலும் உண்பர். ஆனால் இஸ்லாமியர் “ஹலால்” மாமிசம் மட்டுமே உண்பர். எனவே மாமிச தொழில் இயற்கையாக “ஹலால்” மாமிசத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. இது பிற மதம் சார்ந்த மாமிச விற்பனையாளர்களை காணாமல் போகச் செய்ய தெரிந்தோ, தெரியாமலோ, செய்யப்படும் ஓர் மிகப்பெரிய சூழ்ச்சி என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இதைத் தான் நஸீம் நிக்கோலஸ் தளெப் “சிறுபான்மையினரின் சர்வாதிகாரம்” என்றழைக்கிறார்.

இஸ்லாமியரைத் திருப்திப்படுத்த “ஹலால்” மாமிசத்தை நோக்கித் தள்ளப்படும் உணவகங்களால், மாமிச உற்பத்தியில் இஸ்லாமிய ஏகாதிபத்தியம் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டருகே இருக்கும் கறிக்கடைகளை பார்க்கவும் அந்த கடைகளே இந்த நிதர்சனத்தை உங்களுக்கு உணர்த்தும்.

இந்நாட்டில் அனைத்து மதத்தவர்களும் தம் மதத்தையும், அது சார்ந்த நம்பிக்கைகளையும் பின்பற்ற சகல உரிமைகள் உள்ளது. இதை இஸ்லாமியர்களுக்காக விட்டு கொடுக்கவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ வேண்டும் என்று அவர்கள் நினைப்பதே கடும் கண்டனத்திற்குரியது. அது இந்திய அரசியலமைப்பிற்கே எதிரானது. “ஹலால்” போன்ற மதவாத சிந்தனையை, மக்கள் மனதில் ஓர் விஷ ஊசியைப் போல ஏற்றும் இத்யாதிகளைத் தவிர்ப்போம்.


Share it if you like it