Share it if you like it
- மே 19 அன்று ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பங்கஜ் புண்யா என்பவர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் வகையில் அவர் ஹிந்துக்களுக்கு எதிராக மோசமான, மிக அருவருக்கத்தக்க அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் ஹிந்துக்களின் புனிதமான முழக்கங்களை மிக அநாகரீகமாக கொச்சைப்படுத்தியிருந்தார். புலம்பெயர்ந்தோருக்கு உதவ பேருந்துகளை இயக்க காங்கிரஸ் விரும்பியது, ஆனால் பிஷ்ட் அரசாங்கம் இந்த விஷயத்தை அரசியல்மயமாக்கத் தொடங்கியது. காவி உடையணிந்த சங்கிகள் மட்டுமே இத்தகைய இழிவான செயல்களைச் செய்ய முடியும்.
- சங்கிகள் தான் சடலங்களை வெளியேற்றி பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். மேலும் இதைவிட ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் மோசமான வார்த்தையை பயன்படுத்தி பதிவிட்டிருந்தார். ஆனால் ஊடக தர்மத்தின்படி அந்த வார்த்தையை நாம் பயன்படுத்தவில்லை. இதுபோல் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே பல சமூக வலைதள பயனாளர்கள் அவருடைய பதிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் பங்கஜ் புண்யா அந்த பதிவை உடனடியாக நீக்கினார். அந்த பதிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- மத நம்பிக்கைகளை குறிவைத்து பங்கஜ் புனியா கூறிய மோசமான கருத்துக்களுக்காக லக்னோ, நொய்டா, டெல்லி, மற்றும் அலிகார் ஆகிய பல இடங்களிலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 153 ஏ, 295 ஏ, 505 (2) ஐபிசி மற்றும் 67 ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share it if you like it