காங்கிரஸ் கூட்டணி உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் இரண்டு ஹிந்து துறவிகள் கிறிஸ்தவ மிஷநரிகளின் தூண்டுதல் பெயரில் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர்.
அதே போன்று காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (காஷ்மீர் பண்டிட்) அஜய் பண்டியா என்பவர் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார். வழக்கம் போல் கோமா நிலையையே, மேற்கொண்டது ஊடகங்கள், பிரபலங்கள், பத்திரிக்கைகள். இக்கொடுமைக்கும் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார் கங்கனா ரனாவத்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை முன்முன் தத்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
370 பிரிவை நீக்கிய பொழுது எதிர்ப்பு தெரிவித்த ஊடகங்கள், போலி நடுநிலையாளர்கள் எங்கே? இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. காலத்தின் தேவை தற்பொழுது நாட்டிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/moonstar4u/status/1270739642971598853