ஹிந்து மதத்தை பற்றி கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி செய்வதா? ஆளுநர் மற்றும் முதல்வரிடம் முறையிட்ட- பாஜக தலைவர்கள்!

ஹிந்து மதத்தை பற்றி கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி செய்வதா? ஆளுநர் மற்றும் முதல்வரிடம் முறையிட்ட- பாஜக தலைவர்கள்!

Share it if you like it

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருதற்கு உள்நாட்டு சதி, வெளி நாட்டு சதி, மிஷனரிகளின் தந்திரம், அடிப்படைவாதிகள், தி.க போன்ற எண்ணற்ற அமைப்புகள் இணைந்து ஹிந்து மதத்தின் புனிதத்தை கெடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைகழகம் Department of Christian Studies ஜூலை 21-24 தேதிகளில் இந்திய மதங்களின் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் ஆலயங்கள் பற்றி விவாதிப்பது என்று முடிவு செய்துள்ளது. இச்செய்தி ஹிந்துக்களின் உணர்வுகளை மீண்டும் கடுமையாக புண்படுத்தியுள்ளது.

மெட்ராஸ் பல்கலைக்கழகம் கிருஸ்தவ பிரிவு சார்பாக, இந்து தர்மத்தை தாக்குவதற்காக நடத்தப்படுகின்ற நிகழ்ச்சியை தடை செய்வதற்கு மேதகு தமிழக ஆளுநரிடம் ( Chancellor of University ) மனு அளித்துள்ளோம். அதில் கலந்து கொள்ள இருப்பதாக உள்ள அயல்நாட்டைச்சார்ந்தவர்களுக்கு விசா வை cancel செய்வதற்கும் Ministry of External Affairs க்கும் மனு அளித்துள்ளோம் என்று பாஜக வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச்.ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தை இழிவுபடுத்தும் இந்த மாநாடு நடத்த அனுமதியளித்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜூலை 21 சென்னை பல்கலைக்கழகத்திற்கு செல்ல தயாராவோம். என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it