ஹிந்து மதத்தை பற்றி புரளி பரப்பும் தி.க நெத்தியடி கொடுத்த ஷியாம் கிருஷ்ணசாமி!

ஹிந்து மதத்தை பற்றி புரளி பரப்பும் தி.க நெத்தியடி கொடுத்த ஷியாம் கிருஷ்ணசாமி!

Share it if you like it

அன்றைய மாமேதை கண்ணதாசன் முதல் இன்றைய இளைய தலைமுறை தயா அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் 14.8.2018 அன்று  வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய அற்புதமான பதிவு வரை.

தமிழகத்தில் தேவையில்லாத ஆணியாகவும் உழைத்து சாப்பிடும் அனைவர் நினைவுக்கும் உடனே வரும் கழகம் எதுவென்றால் அது திராவிடர் கழகம் என்று கூறினால் அதுமிகையன்று.

இந்நிலையில் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியாரின் புகைப்படத்துடன் பிராமணர்களை பார்த்து பெரியார் கேள்வி கேட்பது போல் அது என்னவென்றால். பார்ப்பான் விரதம் இருக்க மாட்டான், மாலை போட மாட்டான், அலகு குத்த மாட்டான், அக்னிச் சட்டி ஏந்த மாட்டான், மொட்டை போட மாட்டான், சாமி வந்து ஆட மாட்டான், தன் சொந்த பணத்தை செலவழிக்க மாட்டான், பாதை யாத்திரை போக மாட்டான், குறிப்பாக உண்டியலில் காணிக்கையும் தட்டில் தட்சனையும்  போடவே மாட்டான்!! நீ மட்டும் ஏன்டா?? என்று கேள்வி எழுப்புவது போல் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி அவரின் கேள்விக்கு இவ்வாறு பதில் கூறியுள்ளார். இது ”எல்லாம் பிராமணர் சொல்லி யாரும் செய்யவில்லையே… பிராமணர் கலாச்சாரத்தில் இல்லை அவங்க செய்யல… மீதி தமிழர் கலாச்சாரத்தில் இருக்கிறது அவர்கள் செய்கிறார்கள். பிராமணரே மாட்டுக்கறி உண்டாலும் மீதி தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஹிந்து மதத்தில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவரவர் பழக்க வழக்கங்களுடன் வாழ்வதற்கான சமஉரிமை உண்டு, ஹிந்து மதத்தில் யாரும் யாருக்கும் அடிமையும் அல்ல எஜமானும் அல்ல என்கிற உன்னத தத்துவத்தை விளக்கும் விதமாக அவரின் கருத்து இருந்ததாக நெட்டிசன்கள் ஷியாம் கிருஷ்ணசாமியை பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it