2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று (ஜூலை -23) நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். இந்த நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பாரதீய கிசான் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் த.பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
நான்கு வகையான மக்களின் நலனில் கவனம் அதாவது ஏழை, மகளிர், இளைஞர், இவர்களோடு சேர்த்து விவசாயியையும் ( அன்னதத்தா ) சேர்த்தது வரவேற்கத்தக்கது.
- அடுத்த இரண்டு வருடங்களில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது சம்பந்தமாக அளித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
- நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற அதாவது ஆத்மநிர்பர் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவு பெற உற்பத்தி சேமிப்புக் கிடங்குகள் மற்றும் விற்பனைக்கு ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. குறிப்பாக கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் கடலெண்ணெய், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் வகைகள்.
- காய்கறிகள் உற்பத்தி, விநியோகம், மற்றும் விற்பனையை மேம்படுத்துவதில் FPO, கூட்டுறவுத்துறை மற்றும் Startupகளை ஊக்குவிப்பதான அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
- Digital Public Infrastructure ( DPI ). காரிப் பயிர்களை 400 மாவட்டங்களில் டிஜிட்டல் படுத்துவது பற்றியும், 6 கோடி விவசாயிகளின் நிலப்பதிவேடை டிஜிட்டல் மையம் ஆக்குவதின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
- பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய பயிர் வகைகளின் விதைகளை உருவாக்குவதில் தனியாரின் பங்களிப்போடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளுவதான அறிவிப்பும், மேலும் பருவநிலை தாங்கக்கூடிய மற்றும் உற்பத்தி அதிகமாக தரக்கூடிய 109 பயிர் வகைகளின் விதைகள் மற்றும் 32 பழ விதைகளை இந்த அரசு இவ்வாண்டு அறிமுகப்படுத்தும் என்ற அறிவிப்ப வரவேற்க்கதக்கது.
- கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2.66 லட்சம் கோடிகளை அரசு செலவழிக்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
- ஒரு கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான அறிவிப்ப வரவேற்கத்தக்கது.
- இளைஞர்களின் பயிற்சி ( Internship ) தொடர்பாக தனியார் நிறுவனங்கள் தனது CSR நிதியிலிருந்து அளிப்பது சம்பந்தமான அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
- KCC ஐந்து மாநிலங்களில் விவசாயிகளுக்கு Jan Samarth Kisan Credit Card அறிமுகப்படுத்துவது சம்பந்தமான அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
- National Co-operative Policy. கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பினை பெருக்குவது சம்பந்தமான கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவது பற்றி தேசிய கூட்டுறவு கொள்கை இந்த ஆண்டு வகுக்கப்படும் என்று அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
- விவசாய ஆராய்ச்சி உள்கட்டமைப்பை தீவிரமாக ஆய்வு செய்து பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய மற்றும் அதிக உற்பத்தி தரக்கூடிய பயிர்களின் விதைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதற்காக தகுந்த நிதி ஒதுக்கப்படும். இந்தப் பணியில் தனியார் விவசாய வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இந்த ஆண்டு விவசாயத் துறைக்கு மொத்தம் 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.