பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சையில் பிரதமர் மோடி மற்றும் குமாரசாமி மீது அவதூறு பரப்ப டிகே சிவகுமார் தனக்கு ரூ.100 கோடி அளிக்க முன்வந்ததாக பாஜக நிர்வாகி புகார் கூறியுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் பாஜக தலைவர் தேவராஜே கவுடா, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் மீது பரப்பரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். சிறைக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவராஜே கவுடா, “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்களை பரப்பியது ஹெச்.டி.குமாரசாமிதான் என்று என்னிடம் சொல்லப்பட்டது. பிரஜ்வல் ரேவண்ணாவிடம் டிரைவராகப் பணிபுரிந்த கார்த்திக் கவுடாவே இவை அனைத்தையும் திட்டமிட்டார் என்று கூறினார்.
மேலும் பிரதமர் மோடி மற்றும் மாநில முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி ஆகியோரை அவதூறாகப் பேசுவதற்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ.100 கோடி வழங்கியதாக பரப்பரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். இதனை அடுத்து சிவக்குமார் தனக்கு முன்பணமாக 5 கோடி ரூபாய் அனுப்பியதாகவும், முன்னாள் எம்.எல்.சி எம்.ஏ.கோபாலசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அனுப்பியதாகவும் அவர் கூறினார்.
நான் அவர்களின் திட்டங்களில் ஒரு பகுதியாக இருக்க மறுத்தபோது, அவர்கள் முதலில் என்னை ஒரு வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்தனர், ஆனால் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், என்னை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்க வைத்தார்கள். இந்த தந்திரமும் தோல்வியடைந்ததால், என் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். நான் நான்கு நாட்கள் விசாரிக்கப்பட்டேன், ஆனால் அவர்களால் எதையும் பெற முடியவில்லை.
சிவகுமாரின் உரையாடல்களின் ஆடியோ பதிவுகள் என்னிடம் உள்ளன. நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அந்த உரையாடல்களை வெளியிடுவேன், காங்கிரஸ் அரசு கவிழும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு தேவராஜே கவுடா கூறினார்.