முதல் தலைமுறை வாக்காளர்களாக வாக்களிக்கும் 10,90,547 பேர் !

முதல் தலைமுறை வாக்காளர்களாக வாக்களிக்கும் 10,90,547 பேர் !

Share it if you like it

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் (மார்ச் 27) மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

6.23 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்த வாக்காளர்களில் 3.17 கோடி பேர் பெண் வாக்காளர்கள்; ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 8,465 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் 7 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட 6.13 லட்சம் பேர் வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

தேர்தல் அலுவலர்களுக்கு ஏப்.7-க்குள் 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலைவிட கூடுதலாக 177 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் 117 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 191 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வழங்க இன்றே கடைசி நாள் ஆகும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரொக்கமாக மட்டும் ரூ.33 கோடியும், ரூ.33 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.27 கோடி மதிப்புள்ள மதுபானம் உள்ளிட்ட பிற பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தனியார் கட்டடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு 13ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு அதிகாரிகள் கொண்டு பூத் சிலிப் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். தேர்தல் விதிமீறல் பற்றி புகார் அளிப்பவர்கள் தங்கள் விவரத்தை மறைத்துவிட்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *