செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இந்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மாங்காடு பக்கத்தில் உள்ள கொழுமணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அங்கு ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இதை குறிப்பிட்டு அனிதா சம்பத் இந்த படிக்கட்டுகளை கட்டுவதற்காக 11 லட்சமா? 12 லட்சத்தில் முழு வீடே கட்டலாமே என்று கேள்வி எழுப்பி அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். இதற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.