இந்தியாவின் பிரதமராக 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆட்சியில் மட்டும் 12.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ யின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதில் 8.9 கோடி வேலைவாய்ப்புகள் உற்பத்தி மற்றும் சேவை துறையில் உருவாகியுள்ளது.
ஆனால் 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 2.9 கோடி வேலைவாய்ப்புகள் மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ யின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், 2023-24 நிதியாண்டில் உற்பத்தி, விற்பனை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் புதிய சாதனை படைத்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, 2023-24 நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரூ.1.55 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் விற்பனை எண்ணிக்கை ரூ.1.34 லட்சம் கோடியாக இருந்தது. மோடி அரசின் கடைசி 10 நிதியாண்டுகளில், கிராமப்புறங்களில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு காதி மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை, 2013-14 நிதியாண்டில் ரூ.31154.20 கோடியாக இருந்தது, இது 2023-24 நிதியாண்டில் மிக உயர்ந்த மட்டமான ரூ.155673.12 கோடியாக உயர்ந்துள்ளது, இது இதுவரை இல்லாத மிகப்பெரிய சாதனையாகும். 2023-24 நிதியாண்டில், ஆணையத்தின் முயற்சிகள் கிராமப்புறங்களில் 10.17 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கி, கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன.