120 கோடியில திமுக அமைச்சரோட பங்களாவா ? கிரஹப் பிரவேசத்திற்கு கூப்பிடுங்க சார் !

120 கோடியில திமுக அமைச்சரோட பங்களாவா ? கிரஹப் பிரவேசத்திற்கு கூப்பிடுங்க சார் !

Share it if you like it

திமுக அமைச்சரின் பங்களா சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதாவது திமுகவின் கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி ஒரு மாபெரும் பங்களாவை கட்டி உள்ளார் எனவும் இதுதான் அந்த வீடு எனவும் ஒரு வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 120 கோடிக்கு பெரும் பங்களா போன்ற வீட்டை ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கட்டி வருகிறார் என்ற செய்தி பல விமர்சனங்களை பெற்றுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் 120 கோடிக்கு வீடு கட்டி வரும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர் காந்தி எம்எல்ஏ விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கிரகப்பிரவேசத்திற்கு கூப்பிடுங்கள் சார் என்று கலாய்த்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு அமைச்சருக்கு இந்த சின்ன குடிசையை கூட கட்ட உரிமை இல்லையா என்று அமைச்சர் ஆர் காந்தி அவர்களை கிண்டல் செய்யும் பல விமர்சன கமெண்ட்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒரு பங்களா வீடியோ வெளியானதால் புழல் சிறையில் தவித்து வரும் செந்தில் பாலாஜி இன்று வரை எப்பொழுது வெளியில் வருவார் என்பது தெரியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் ஜவுளி துறை அமைச்சர் ஆர் காந்தியின் பங்களா வீடியோ வெளியானது குறித்து திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.


Share it if you like it