16, 000 பெண் கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சி கின்னஸ் சாதனை !

16, 000 பெண் கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சி கின்னஸ் சாதனை !

Share it if you like it

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் நடைபெற்ற கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற 16, 000 பெண் கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், டோல்கேட் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு நேற்று காலை முதல் நடைபெற்றது. இதன் இறுதி நிகழ்வாக 16, 000 பெண் கலைஞர்கள் ஒரே வண்ண உடையில் பங்கேற்ற, மாபெரும் கின்னஸ் உலக சாதனைக்கான வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடன கலைஞர்கள் தொடர்ந்து ஆறு நிமிடம் ஒரே பாவனையுடன் ஆட்டம் ஆடினர். இந்த ஆட்டம் கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன், கொங்குநாடு கலைக்குழுவின் தலைவரும், கட்சியின் மாநில பொருளாளருமான கே கே சி பாலு ஆகியோர் இந்த சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.


Share it if you like it