18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்கள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி !

18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்கள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி !

Share it if you like it

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 19 இணையதளங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை முடக்கி உள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்கள் முடக்கி, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் பலமுறை விடுத்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாததால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *