3 மாதத்தில் 194 இள வயது பிரசவங்களா ? சத்தமே இல்லாமல் திராவிட ஆட்சியில் அரங்கேறிய அவலம் !

3 மாதத்தில் 194 இள வயது பிரசவங்களா ? சத்தமே இல்லாமல் திராவிட ஆட்சியில் அரங்கேறிய அவலம் !

Share it if you like it

மதுரை மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 194 இள வயது பிரசவங்கள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதங்களில் மதுரை மாநகராட்சியில் மட்டும் 49க்கும் அதிகமாக இளம் வயது பிரசவங்கள் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என சுற்றறிக்கை அரசு அனுப்பி இருந்தது. ஆனால், தற்பொழுது வரை எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு மனநிலை ஆலோசனை வழங்கப்படுவதில்லை.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா என்று ஒருபுறம் இருக்க மறுபுறம் சத்தமே இல்லாமல் குழந்தை திருமணங்கள் அரங்கேறி உள்ளது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, அரசு அதிகாரிகள் என்ன செய்து செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 194 இள வயது பிரசவங்கள் பதிவாகி இருக்கிறது என்றால் அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகி இருக்கும் இள வயது பிரசவங்கள் எடுத்து பார்த்தால் நெஞ்சுவலியே வந்திரும் போலிருக்கு. தமிழக அரசு குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *