2 பேர் சேர்ந்து பிடித்த கேட்ச் – குவியும் பாராட்டு

1
1259
2 பேர் சேர்ந்து பிடித்த கேட்ச் - குவியும் பாராட்டு

ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இருவர் சேர்ந்து சாதுர்யமான முறையில் மேற்கொண்ட கேட்ச் ரசிகர்களைக் கவர்ந்தது.

மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பி.பி.எல். எனப்படும் பிக் பாஷ் லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் இரு அணிகளாக எதிரெதிரே சந்தித்தனர். பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் தூக்கி அடித்த பந்து மைதானத்தின் எல்லைக் கோட்டுக்கு அருகில் இருந்த பென் டங்கின் கையில் சிக்கினாலும் அவர் கட்டுப்பாட்டை இழந்து எல்லைக் கோட்டை மிதிக்க நேர்ந்தது. எனினும் அதற்கு சில வினாடிகள் முன் பந்தை அவர் வீசிவிட அதனை நதன் கோல்டர் நைல் பிடித்ததால் அது விக்கெட்டானது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here