தினகரனுக்கு 2 சீட் : ஜான் பாண்டியன், தேவநாதன், ஐஜேகேவுக்கு தலா 1 !

தினகரனுக்கு 2 சீட் : ஜான் பாண்டியன், தேவநாதன், ஐஜேகேவுக்கு தலா 1 !

Share it if you like it

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது குறித்து உயர் மட்ட குழு கூட்டம் நேற்று கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

அப்போது, புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டு கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் அண்ணாமலை வழங்கினார். தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், ஆலோசனை நடத்தி, அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஓதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது, தேனி தொகுதியில் அமமுக போட்டியிடலாம் என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேபோல், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், இந்திய ஜனநாயக் கட்சி (ஐஜேகே) ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்று பாஜக தெரிவிக்கவில்லை. இன்னும் ஓரிரு நாளில் யார் யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ், வாசனுடன் தொடர்ந்து பேச்சு: இதேபோல், பாஜக கூட்டணியில் உள்ள தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ், ஜி.கே.வாசனின் தமாகா ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


Share it if you like it