34 மாவட்டங்களில் உள்ள 129 விடுதிகளின் பராமரிப்புக்கு 20 கோடி ஒதுக்கீடு !

34 மாவட்டங்களில் உள்ள 129 விடுதிகளின் பராமரிப்புக்கு 20 கோடி ஒதுக்கீடு !

Share it if you like it

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளைச் சீரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவர் களுக்காக விடுதிகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதி மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி, தனிப்பட்ட வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை விடுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டில் விடுதிகளுக்குசிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது. .
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக 34 மாவட்டங்களில் 63 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 66 மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகள் என மொத்தம் 129 விடுதிகளுக்கு ரூ.20 கோடியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், விடுதிகளில் மின்சார பராமரிப்புப் பணிகள், விடுதி கட்டடங்களில் பழுது நீக்குதல், கதவு, ஜன்னல்கள் சீரமைத் தல் போன்ற பணிகள் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Share it if you like it